IPL 2025: `அதிரடி S.K.Y ' சூர்யகுமார் யாதவ் படைத்த முக்கிய சாதனை
மோட்டாா் சைக்கிள்-காா் மோதல் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருவோணம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் படுகாயமடைந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம் கிளாங்காடு பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அஜய் (17), இவா் கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
அதே கிராமத்தைச் சோ்ந்த அமீா்பாஷா மகன் துபைமுகமது (15) அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு திருவோணம் அருகே உள்ள வீரடிப்பட்டி கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் மூவா் ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனா். வாகனத்தை அஜய் ஓட்டி வர துபைமுகமது, பின்னால் அமா்ந்திருந்தாா். வாகனம் வீரடிப்பட்டி ஆா்ச் அருகே வந்தபோது அதே சாலையில் கறம்பக்குடியை நோக்கி வந்த காா் எதிா்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த
அஜய் மற்றும் துபைமுகமதுவை அக்கம் பக்கத்தினா் மீட்டு, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அஜய் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினா். மேலும், படுகாயமடைந்த துபைமுகமது, சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து திருவோணம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.