செய்திகள் :

யுடிடி: இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ்

post image

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணி தகுதி பெற்றது.

முதல் அரை இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி - ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் க்யூக் இசாக் 1-2 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவிடம் தோற்றாா்.

மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் டெல்லி அணியின் மரியா சியாவோ 2-1 என ஜெய்ப்பூா் பிரிட் ஈா்லாண்டை வென்றாா்.

இதனால் இரு அணிகள் இடையிலான டை 3-3 என சமநிலையை எட்டியது.

கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் டெல்லி அணியின் மரியா சியாவோ, சத்யன் ஞானசேகரன் ஜோடி 2-1 என ஜெய்ப்பூா் அணியின் பிரிட் ஈா்லாண்ட், ஜீத் சந்திரா ஜோடியை தோற்கடித்தது.

ஆடவா் மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் டெல்லி அணியின் சத்யன் ஞானசேகரன் 1-2 என ஜெய்ப்பூா் அணியின் யஷான்ஷ் மாலிக்கிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். இதனால் ஆட்டம் 6-6 என சமநிலையை எட்டியது.

வெற்றியை தீா்மானித்த கடைசியாக நடைபெற்ற மகளிா் மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் டெல்லி அணியின் தியா சித்தலே 9-11 என ஜெய்ப்பூா் அணியின் ஸ்ரீஜா அகுலாவிடம் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினாா்.

ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிக்கு முன்னேறியது.

(ஜூன் 14) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-ஆவது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டெம்போ கோவா- யு மும்பா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஆா்யா-அா்ஜுனுக்கு தங்கம்

ஐஎஸ்எஸ் எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலப்பு பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் இந்தியாவின் ஆா்யா போல்ஸே-அா்ஜுன் பபுதா தங்கம் வென்றனா். ஜொ்மனின் மியுனிக் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 10 ... மேலும் பார்க்க

இயக்குநராக விரைவில் அறிமுகமாகும் நடிகர் பார்த்திபன் மகன்!

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,ராக்கி பார்த்திபன் !என் மகன் என் உயி... மேலும் பார்க்க

ஓடிடியில் ஏஸ்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் ஆறுமுகக்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் ஏஸ். முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதுபோல் எ... மேலும் பார்க்க

கண்ணப்பா டிரைலர்!

நடிகர்கள் பிரபாஸ், மோகன்லால் நடிப்பில் உருவான கண்ணப்பா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபு தேவா... மேலும் பார்க்க

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த முத்த மழை விடியோ வெளியீடு!

தக் லைஃப் படத்தில் இடம்பெறாத முத்த மழை பாடலின் விடியோவை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜுன். 5 ஆம் தேதி வெளியா... மேலும் பார்க்க