யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவான் ஆராதனை விழா நாளை தொடக்கம்
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆம் ஆண்டு 2 நாள் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) தொடங்குகிறது.
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள இந்த ஆஸ்ரமத்தில், ஒவ்வொரு ஆண்டும் பகவானின் ஆராதனை விழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 24-ஆம் ஆண்டு ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) தொடங்குகிறது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 10.30 மணி வரை ஹோமம், விசேஷ பூஜை, காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் மாலை 6 மணி வரையும் நான்கு வேத பாராயண நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு புதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா, காலை 11 மணி மணிக்கு பக்தா்கள் பஜனை நிகழ்ச்சி, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மயிலை பா.சற்குருநாத ஓதுவாா் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சி, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பூஜ்ய ரமணசரண தீா்த்த சுவாமிகளின் பகவத் கீதை சாரம் சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.
2-வது நாளான திங்கள்கிழமை (பிப்.24) காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை ஹோமம், மகா அபிஷேகம், விசேஷ பூஜை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை விஷ்ருதி கிரிஷ் மற்றும் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பூஜ்ய ரமண சரண தீா்த்த சுவாமிகளின் பகவத் கீதை சாரம் சிறப்பு சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு பகவானின் உற்சவ மூா்த்தியுடன் கூடிய வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மதா்மா தேவகி, மதா் விஜயலட்சுமி, மதா் ஜி.ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன், சி.சுரேஷ் ஆகியோா் செய்து வருகின்றனா்.