அண்ணாமலை - டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?
'யோவ் இங்க பாரு'- கடுப்பான திருச்சி சிவா; மன்னிப்பு கேட்ட செந்தில் பாலாஜி - வைரலாகும் வீடியோ
கரூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.20) அன்று திமுகவின் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் சார்பில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கரூர் சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜி மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். இக்கூட்டத்தில் திரளான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்.பி திருச்சி சிவா மேடையில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது செந்தில் பாலாஜி தாமதமாக மேடைக்கு ஏறி வந்தப்போது பொதுமக்கள் அனைவரும் செந்தில் பாலாஜியை பார்த்திருக்கின்றனர். மேலும் மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக எழுந்திருக்கின்றனர்.
அந்த சமயத்தில் திருச்சி சிவா பேசுவதை நிறுத்தி விட்டு கோபமடைந்திருக்கிறார். "யோவ் யாரா இருந்தா என்ன ? இங்க பாரு. அவர் பாட்டுக்குத் தான் வராரு, நீங்க ஏன் அங்க பாக்குறீங்க, நான் அடி வயிற்றிலிருந்து பேசிட்டு இருக்கேன்" என கோபமாகப் பேசியிருக்கிறார்.

அதன் பிறகு மேடைக்கு வந்த செந்தில் பாலாஜி திருச்சி சிவாவிற்கு சால்வை அணிவித்த பிறகு திருச்சி சிவாவிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். தற்போது திருச்சி சிவா கோபமாகப் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.