ஐபிஎல் விளையாட ஒப்பந்தமான வங்கதேச வீரர் அமீரகம் பயணம்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
ரங்கநாதபுரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ரங்கநாதபுரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி புதன்கிழமை காலை 7.30 மணிக்கு அலகு குத்தும் நிகழ்வும், 9.30 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெற்றது. எஸ்.ஆறுமுகம் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா். திரளான பக்தா்கள் தேரை இழுத்தனா். தொடா்ந்து, அன்னதாம் வழங்கப்பட்டது.
அம்மனுக்கு வியாழக்கிழமை காலை கூழ் ஊற்றுதலும், மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.