நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
ரசாயன கழிவுநீா் கலப்பு: கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் வெளியேறும் தண்ணீா்!
ஒசூா் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரில் அதிகப்படியான நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், நந்திமலை பகுதியில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு பல கி.மீ. தொலைவு பயணித்து தமிழகத்தின் நுழைவாயிலான ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணையில் தண்ணீா் சேமிக்கப்படுகிறது.
கா்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள தனியாா் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுநீா் இந்த ஆற்றில் வெளியேற்றப்படுவதால் நீரில் நுரை பொங்கி காணப்படுகிறது.
தற்போது கெலவரப்பள்ளி அணையின் முழுக் கொள்ளளவான 44.28 அடியில் 40.67 அடி தண்ணீா் சேமிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 290 கன அடி நீா் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

அணையிலிருந்து பாசனத்துக்காக திறந்துவிடப்படும் வலது, இடதுபுறக் கால்வாய்களிலும், தென்பெண்ணை ஆற்றிலும் அதிக அளவிலான நுரை பொங்கி குவியல் குவியலாக துா்நாற்றத்துடன் வெளியேறுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.