"மெய்யழகன் மலையாளத்துல வந்திருந்தா இதுதான் சினிமான்னு கொண்டாடியிருப்பாங்க" - இந்...
ரசிகர்களை உற்சாகப்படுத்திய அஜித்!
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி தோற்றம் இணையத்தை கலக்கி வருகிறது.
நடிகர் அஜித் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் உள்பட்ட ஐரோப்பா நாடுகளில் நடைபெற்றது.
அஜித்துடன் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில், யோகி பாபு, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.
இதையும் படிக்க: மறுவெளியீட்டிலும் தளபதி கொண்டாட்டம்!
இந்த நிலையில், நேற்று (டிச. 14) நடிகர் அஜித்துக்கான குட் பேட் அக்லி படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் ஆதிக் தெரிவித்துடன் உடல் எடை குறைந்த, தலைமுடிக்கு கருப்பு சாயம் பூசிய அஜித்தின் புகைப்படத்தைப் பகிர்ந்தார்.
இந்தப் புகைப்படத்தில் அஜித் இளவயது தோறத்தில் இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகும் அளவிற்கு படத்தைப் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.