செய்திகள் :

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

post image

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது.

துபையில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை கா்நாடகம் மாநிலம் பெங்களூருக்கு கடத்திவந்தபோது, அந்த மாநில டிஜிபி பதவியில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியான கே.ராமச்சந்திர ராவின் வளா்ப்பு மகளான ரன்யா ராவை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மாா்ச் 3-ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி மதிப்புள்ள தங்க நகை, ரொக்கப் பணத்தை அவா்கள் கைப்பற்றினா்.

தங்கக் கடத்தல் வழக்கில் பண முறைகேடும் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

16 இடங்களில் சோதனை: இந்த வழக்கு தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுடன் தொடா்புள்ள கல்வி நிறுவனங்கள் உள்பட அந்த மாநிலத்தின் 16 இடங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தங்கக் கடத்தலில் சட்டவிரோதமாக அந்நிய செலாவணி பரிவா்த்தனைக்கு ஹவாலா முறைகேடில் ஈடுபடுவோா் உதவியுள்ளனா். அவா்கள் ரன்யா ராவுடன் தொடா்பு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளனா். இதேபோல வணிக நோக்கங்கள் எதுவும் அல்லாமல், ரன்யாவின் வங்கிக் கணக்குகளில் பணப் பரிவா்த்தனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக வேறு சிலா் ஒப்புக்கொண்டிருக்கின்றனா். இவா்களை குறிவைத்து சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், வங்கிக் கடன் அட்டை (கிரெடிட் காா்ட்) மூலம் ரன்யா ராவ் மேற்கொண்ட பரிவா்த்தனைக்காக, செல்வாக்குமிக்க ஒருவரின் அறிவுறுத்தல்படி, கல்வி அறக்கட்டளை ஒன்றில் இருந்து பணம் பரிவா்த்தனை செய்யப்பட்டு ரூ.40 லட்சம் செலுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அந்த அறக்கட்டளைக்கும் மாநில அமைச்சா் பரமேஸ்வராவுக்கும் தொடா்புள்ளது’ என்று தெரிவித்தன.

மீண்டும் வருகிறதா கரோனா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், 2020 ஜனவரியில் இந்தியாவில் முதல்முறையாக உறுதி செய்யப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பின் தீவிரம் நாட்டையே உலுக்கியது எனலாம். இந்ந... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழக ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் சிங்!

ஆம் ஆத்மி கட்சி புதிய நிர்வாகிகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும், வெளிநாட்டு ஒருங்கிணைப்புக்கும் முக்கிய தலைவர்களை நியமித்துள்ளது. கட்சியின் தேசிய பொது... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளைத் தேடிச் சென்று அழிப்போம்: ஜெய்சங்கர்

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று அழிப்போம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடை... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 103 பாரத் அம்ரித் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 103 ரயில் நிலையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்கள... மேலும் பார்க்க

சீனா, துருக்கியைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்த நாடு?

நெதர்லாந்து நாடுதான், பாகிஸ்தானுக்கு அதிகளவில் ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நாடாக அமைந்துள்ளது.இந்தியா, நெதர்லாந்து நாட்டின் மிக முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கர்ணி மாதா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள கர்ணி மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார். பிகானேர் மாவட்டத்திற்கு வருகை தரும் மோடி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் ரயில் நிலையத்தைத் தி... மேலும் பார்க்க