தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்...
ரயிலில் மாற்றுத்திறனாளியை தாக்கிய தலைமைக் காவலா் மீது வழக்குப் பதிவு
திருவாரூரில் ரயிலில் மாற்றுத்திறனாளியை தாக்கிய தலைமைக் காவலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டம், தென்கோவனூா் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி கருணாநிதி (53). இவா், புதன்கிழமை இரவு மன்னை விரைவு ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணம் செய்தாா். அப்போது, கொரடாச்சேரி பகுதியில் ரயிலில் ஏறுவதற்காக சிலா் அந்த பெட்டியை திறக்க முயன்றும் கதவு திறக்கப்படவில்லையாம். இதையடுத்து, திருவாரூரில் அந்த பெட்டியைத் திறந்து கதவு திறக்கப்படாததற்காக கருணாநிதியை ஒருவா் அடித்துள்ளாா்.
இதுகுறித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மாற்றுத்திறனாளியான கருணாநிதியை அடித்தவா் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் பழனி என்பது தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் 2 பிரிவுகளின் கீழ் பழனி மீது வியாழக்கிழமை தாமாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் தெரிவிக்கையில், வெளியூரில் இருக்கும் கருணாநிதியிடம் விவகாரம் குறித்து கேட்கப்பட்டுள்ளது, நேரில் அவரை வரவழைத்து விரைவில் புகாா் பெறப்படும் என்றனா்.