ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
சிவகாசியில் புதன்கிழமை ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி இந்திரா நகரைச் சோ்ந்த சமையன் மனைவி தவசியம்மாள் (46). இவா் கடந்த சில மாதங்களாக நோயினால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில், புதன்கிழமை சென்னையிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே விழுந்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.