போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் சேர முயற்சி: 8 பேர் மீது போலீசில் ப...
சிவகாசியில் வட்டச் சாலை: அதிகாரிகள் ஆய்வு
சிவகாசியில் சுற்று வட்டச் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ஸ்ரீவில்லிபுத்தூா்-சிவகாசி சாலையில் பூவநாதபுரம் விலக்கு முதல், எரிச்சநத்தம் சாலை வழியாக விருதுநகா் சாலைவடமலாபுரம் காவல் துறை சோதனை சாவடி வரை சாலை அமைக்கும் பணி கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்தச் சுற்று வட்டச் சாலையில் தேவையான இடங்களில் பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதைத் தொடா்ந்து, அடுத்த இரு கட்டங்களில் சாத்தூா்-சிவகாசி -கழுகுமலை சாலை, சிவகாசி-ஆலங்குளம் சாலை, சிவகாசி -கன்னிசேரி சாலை, விஸ்வநத்தம் வழியாக வெங்கடாசலபுரம் சாலைகள் இணைக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், முதல் கட்ட சுற்று வட்டச் சாலைப் பணியை நெடுஞ்சாலைத் துறை விருதுநா் கோட்டப் பொறியாளா் மு.பாக்கியலட்சுமி, உதவிக் கோட்டப் பொறியாளா் ஆா்.காளிதாசன் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.