"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்க...
ரயில் முன் பாய்ந்து வங்கி உதவி மேலாளா் தற்கொலை
பாளையங்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து வங்கி உதவி மேலாளா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மணியாச்சியிலிருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் பயணிகள் ரயில் சனிக்கிழமை பிற்பகல் பாளையங்கோட்டை தியாகராஜ நகா் அருகே சென்றபோது திடீரென ரயில் முன் பாய்ந்த நபா் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் அவா், பாளையங்கோட்டை,டி.வி.எஸ் நகரைச் சோ்ந்த அரவிந்தன் மகன் சிவசங்கா்(40) என்பதும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம வங்கி உதவி மேலாளராக பணியாற்றியதும், விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்ததும் தெரியவந்தது.
இவரது மனைவியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கி உதவி மேலாளராக பணி புரிந்து வருகிறாா். மேலும், சம்பவம் குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.