செய்திகள் :

ரஷியாவில் இருந்து உரம் இறக்குமதி: 20% அதிகரிப்பு

post image

நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது. இந்தியாவின் மொத்த உர இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 33 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இது தொடா்பாக ரஷிய உர உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஆன்ட்ரே குா்யிவ் கூறுகையில், ‘இந்தியாவில் பாஸ்பரஸ் சாா்ந்த உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது விதித்த தடையால் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உரங்களை அனுப்ப முடிகிறது.

இந்தியாவுக்கு என்பிகே உரங்களை அதிகம் வழங்கும் நாடாகவும் ரஷியா உள்ளது. இந்தியாவின் தேவைப்படும் உர வகைகளுக்கு ஏற்ப ரஷிய ஆலைகள் உற்பத்தியை அதிகரித்துள்ளன. 2025 பிப்ரவரி வரையிலான 3 மாதங்களில் மட்டும் 15 லட்சம் டன் உரம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உர இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கை ரஷியா வழங்குகிறது’ என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா அதிகஅளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதனை முன்வைத்தே அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தாா்.

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

யேமனில், ஹவுதி கிளர்ச்சிப்படையின் தலைமையிலான அரசின் பிரதமர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமன் நாட்டில், ஈரானின் ஆதரவைப்பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையின் தலை... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி! வெடி வைத்து கரைகள் தகர்ப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாபில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில், மக்கள் தொகை அதிகம் நிரம்பிய பஞ்சாப... மேலும் பார்க்க

உக்ரைன்: ரஷியாவின் தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்றத் தலைவர் பலி!

உக்ரைன் மீதான தாக்குதலில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரி பருபி (54) கொல்லப்பட்டார்.தெற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளைக் கொண்டு ர... மேலும் பார்க்க

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

இந்தோனேசியா நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில், அங்குள்ள ஒரு மாகாணத்தின் உள்ளூர் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டதில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவின் நாடாளுமன்ற உறுப்பின... மேலும் பார்க்க

என்ன ஆனது? எக்ஸ் தளத்தில் டிரெண்டாகும் `டிரம்ப் இஸ் டெட்’ பதிவுகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உயிரிழந்து விட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.அமெரிக்காவின் மிக பிரபலமான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன் தொடர் நிஜ வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கவிரு... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்புக்கு அடுத்தது யார்? இந்தியாவின் மருமகன்தான்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஏதேனும் நேர்ந்தால், அதிபர் பதவியை ஏற்கவும் தயார் என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உடல்நிலை குறித்து அவ்வப்போது ச... மேலும் பார்க்க