செய்திகள் :

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் பலி... 16 பேரைக் காணவில்லை: இந்திய வெளியுறவு அமைச்சகம்

post image

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேரைக் காணவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 16 இந்தியர்களைக் காணவில்லை என ரஷிய அதிகாரிகள் தெரிவித்ததாகவும், மேலும் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

”ரஷிய ராணுவத்தில் 126 இந்தியர்கள் பணிபுரிந்தனர். அவர்களில், 96 பேர் பணியிலிருந்து விடுபட்டு இந்தியாவிற்குத் திரும்பினர். மீதமிருந்த 30 பேரில் 12 பேர் பலியானதைத் தொடந்து, 18 பேர் தொடர்ந்து ரஷிய ஆயுதப் படையில் பணியாற்றி வந்தனர்.

அவர்களில், 16 பேரைக் காணவில்லை என்ற பட்டியலில் ரஷிய ராணுவ அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நாங்கள் ரஷிய அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். மீதமுள்ள நபர்களை முன்கூட்டியே திருப்பி அனுப்புமாறு கோரிக்கை வைத்துள்ளோம்” என்று ஜெயிஸ்வால் கூறினார்.

அனைத்து டெபாசிட் கணக்குகளிலும் ‘நாமினி’ பெயரை உறுதி செய்ய வேண்டும்: ஆா்பிஐ அறிவுறுத்தல்

அனைத்து டெபாசிட் கணக்குகள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களில் (லாக்கா்) வாடிக்கையாளா்களின் ‘நாமினி’ (நியமனதாரா்) பெயா் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: முதல் 6 நாளில் 7 கோடி பக்தா்கள் புனித நீராடல்

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவின் முதல் 6 நாள்களில், 7 கோடிக்கும் அதிகமான பக்தா்கள், கல்பவாசிகள், மதிப்பிற்குரிய மடாதிபதிகள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனா். உலகின் மிகப்பெ... மேலும் பார்க்க

பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிப்பதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு: யுஜிசி தலைவா்

‘மாநில அரசால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படும் ஆளுநருக்கு அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிப்பதில் முக்கியப் பங்குள்ளது’ என பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) த... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: கா்ப்பிணிகளுக்கு ரூ. 21,000, மகளிருக்கு மாதம் ரூ. 2,500 -பாஜக வாக்குறுதி

நமது சிறப்பு நிருபா்எதிா்வரும் தில்லி சட்டப்பேரவை தோ்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயரிலான தனது தோ்தல் அறிக்கையின் முதல் பகுதியை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் தில்லி மக்க... மேலும் பார்க்க

‘ஸ்வமித்வ’ திட்டத்தின்கீழ் 65 லட்சம் சொத்து அட்டைகள்: பிரதமா் மோடி இன்று வழங்குகிறாா்

கிராமிய கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் வரைபடங்கள் தயாரித்தல் (ஸ்வமித்வ) திட்டத்தின்கீழ் 65 லட்சம் சொத்து அட்டைகளை பிரதமா் மோடி சனிக்கிழமை வழங்குகிறாா். இந... மேலும் பார்க்க

‘ஆயுஷ்மான பாரத்’ இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்: உச்சநீதிமன்றத்தின் தடைக்கு கேஜரிவால் பாராட்டு

தேசியத் தலைநகா் தில்லியில் ஆயுஷ்மான பாரத் சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தில்லி அரசை கோரிய உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்... மேலும் பார்க்க