"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" - உச்ச நீதிமன்றம் சொன்னதெ...
ராகிங் புகார்: முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகளில் டம்ப்-பெல்ஸ் தொங்கவிட்டுக் கொடுமை! -கல்லூரி முதல்வர் விளக்கம்
கேரளத்தில் அரசு கல்லூரியில் மாணவர்கள் சிலர் ராகிங் கொடுமைப்படுத்துதலுக்குள்படுத்தப்பட்டுள்ளது பற்றி அக்கல்லூரியின் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
கேரளத்தின் கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகளில் சீனியர் மாணவர்கள் சிலர், உடற்பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் டம்ப்-பெல்ஸ்களை தொங்கவிட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும், காம்பஸ் மற்றும் பிற உபகரணங்களால் காயப்படுத்தியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து அக்கல்லூரி முதல்வர்(பொறுப்பு) லினி ஜோசப் செய்தியாளர்களுடன் பேசியிருப்பதாவது:
“இதுபோன்ற ராகிங் கொடுமை குறித்து மாணவர்களால் கடந்த காலங்களில் எவ்வித புகார்களும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்றுதான் முதல் முறையாக ராகிங் புகார் ஒன்று மாணவர் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது.
ராகிங் கொடுமைக்கு உள்படுத்தப்பட்ட மாணவர்கள் உடல்ரீதியாக ஏதேனும் காயங்களோ அல்லது அசௌகரியங்களோ ஏற்படவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் விடுதியைக் கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள ஆசிரியர்களிடமோ தங்கள் பெற்றோர்களிடமோ தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், ராகிங் புகார் பெறப்பட்டவுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் அவர்களிடம் விசாரணைக்கக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ராகிங் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சிகளும் கல்லூரியில் நடத்தப்பட்டுள்ளன.
கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறை பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்கள் கடந்த நவ. 16-ஆம் தேதியன்று கல்லூரி முதலாமாண்டு மாணவர் ஒருவரை மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 800 தொகையை பறிமுதல் செய்துள்ளனர்.
அதன்பின், கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குள் நுழைந்த அவர்கள், ‘சீனியர்களை மதிக்கமாட்டீர்களா..’ என்று அதட்டியபடி, அங்கிருந்த ஒரு மாணவரை கத்தியைக் காட்டி மிரட்டியிருப்பதுடன், இன்னொரு மாணவரின் கழுத்தில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டின்கீழ், 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க :அரசு செவிலியர் கல்லூரியில் ராகிங் கொடுமை: 5 மாணவர்கள் கைது!