செய்திகள் :

ராகுல் பேச்சால் அதிர்ச்சி: 5 லிட்டர் பாலைக் கொட்டியதற்கு இழப்பீடு கோரி வழக்கு!

post image

பாட்னா : ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்டதால் தனக்கு ரூ.250 நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அதற்கான இழப்பீட்டை பெற்றுத்தரக் கோரி, பிகார் மாநிலத்தைச் சேர்ந்ததொரு நபர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ‘நாட்டின் ஒவ்வொரு நிா்வாக அமைப்பையும் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் கைப்பற்றிவிட்டது.

எனவே, பாஜக, ஆா்எஸ்எஸ் மட்டுமன்றி இந்திய அரசுக்கு எதிராகவும் நாங்கள் போராடுகிறோம்’ என்றாா். இந்தக் கருத்துகளை முன்வைத்து, ராகுல் காந்தியை பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் பேசியதைக் கேட்ட அதிர்ச்சியில், தான் கையில் வைத்திருந்த 5 லிட்டர் பாலைக் கொட்டிவிட்டேன் என்று பாதிக்கப்பட்டுள்ள முகேஷ் சௌத்ரி மனு தாக்கல் செய்துள்ளார்.

பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் இந்த விநோதம் அரங்கேறியுள்ளது.

இது குறித்து, சோனுபூர் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் சௌத்ரி கூறியிருப்பதாவது, “நான் வாளியில் பிடித்து வைத்திருந்த 5 லிட்டர் பால் முழுவதும் கொட்டி வீணாகிவிட்டது. பால் விலை லிட்டருக்கு ரூ. 50. எனக்கு ரூ. 250 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளார்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக, ரோசெரா மண்டலத்துக்குள்பட்ட சிவில் நீதிமன்றத்தில் தான் புகாரளித்துள்ள மனுவின் நகலையும் அவர் பொது வெளியில் வெளிப்படுத்தியுள்ளார். அதில், பாரதீய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள 152-ஆவது பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளின்கீழ் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிய கோரியுள்ளார்.

எனினும், இந்த மனு விசாரணைக்காக நீதிமன்றத்தால் எடுத்துக்கொள்ளப்படுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது.

கர்நாடகத்தில் கோர விபத்து: காய்கறி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் பலி!

கர்நாடக மாநிலத்தில் புதன்கிழமை அதிகாலை காய்கறி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.ஹாவேரி மாவட்டம் சவனூரில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் காய்கறிகளை லாரியில் ஏற்றிக் கொ... மேலும் பார்க்க

நாகாலாந்து ஆளுநா் மாளிகையில் மணிப்பூா்,திரிபுரா, மேகாலயம் நிறுவன நாள் கொண்டாட்டம்

கோஹிமா: நாகாலாந்து தலைநகா் கோஹிமாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் இல.கணேசன் தலைமையில் மணிப்பூா், மேகாலயம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்களின் ‘மாநில நிறுவன’ தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிக... மேலும் பார்க்க

ராகுல் காந்தியால் ரூ.250 மதிப்பிலான பால் வீண்! பிகாா் நீதிமன்றத்தில் நூதன மனு!

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியால் ரூ.250 மதிப்பிலான 5 லிட்டா் பால் தரையில் கொட்டி வீணாகிவிட்டது என்று பிகாா் மாநில நீதிமன்றத்தில் முகேஷ் சௌதரி என்பவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாததால் பெண் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உறவினா்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில், அப்பெண் இருந்த ஆம்புலன்ஸின் கதவைத் திறக்க முடியாததால் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தாா். ராஜஸ்தான் மாந... மேலும் பார்க்க

பெண் மருத்துவா் கொலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை கோரி மேல்முறையீடு: மேற்கு வங்க அரசுக்கு அனுமதி

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தோ்தல்: பாஜகவுக்கு சிவசேனை ஆதரவு

புது தில்லி: தில்லி யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய தோ்தல்களில் தில்... மேலும் பார்க்க