செய்திகள் :

ராகு - கேது பெயர்ச்சி 2025: கடகம்

post image

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

நல்ல அறிவாற்றலும், கற்பனைத் திறனும் எதிலும் சிந்தித்துச் செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே!!

கிரகநிலை

26-04-2025 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-04-2025 அன்று கேது பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11-05-2025 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியில் ராகு குடும்ப ஸ்தானத்திற்கு வந்தாலும் உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான குருவுடன் இணைந்திருக்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

கடன்கள் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம், கார், பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் - வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். லாபங்கள் தடைப்படாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் - மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக அமையும். பொன்பொருள் சேர்க்கை சேரும். சிலருக்கு, பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடைபெறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

கொடுக்கல்-வாங்கல்

பொருளாதார நிலை மிகவும் முன்னேற்றகரமாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும்.

உத்தியோகம்

பணியில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப்பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்துமுடிக்க முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.

அரசியல்

பெயரும், புகழும் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். பதவிகள் தேடிவரும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர்வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளைக் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சேமிப்பும் பெருகும்.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் தேடிவரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்குவராமலிருந்த பணத்தொகைகளும் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவ மாணவியர்

நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டும் போட்டிகளில் சிறப்பான பரிசுகளைப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகள் சுபிட்சமாக அமைவார்கள். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

புனர்பூசம் 4ம் பாதம்

மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாள்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.

பூசம்

சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.

ஆயில்யம்

குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். மனகுழப்பம் நீங்கி. காரிய வெற்றி கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கும்.

பரிகாரம்

திங்கள்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று இலுப்பை எண்ணையில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி 16 முறை வலம் வரவும்.

மலர் பரிகாரம்

திங்கள்கிழமை தோறும் அம்மனுக்கு அரளிப்பூமாலை சாற்றி வழிபடவும்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ராகு - கேது பெயர்ச்சி 2025: மீனம்

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவிகரமாகத் திகழவேண்டுமென்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!!கிரகநிலை 26-04-2025 அன்று ராகு பகவான் ராசியில்... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: கும்பம்

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)எந்த பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்துவைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!கிரகநிலை 26-04-2025 அன்று ராகு ... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: மகரம்

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல்திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)எதிலும் போராடி வெற்றிபெறக்கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே!!கிரகநிலை26-04-2025 அன்று ராகு பகவா... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: தனுசு

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்முதல் பாதம் முடிய)கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வ பக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!!கிரகநிலை 26-04-2025 அன்று ராகு பகவா... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: விருச்சிகம்

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல்அனுஷம், கேட்டை முடிய)நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மனநிலையறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!கிரகநிலை26-04-2025 அன்று ராகு பகவான் பஞ்சம ஸ்தானத... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: துலாம்

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய அழகும், அறிவும் உடைய துலா ராசி அன்பர்களே!!கிரகநிலை26-04-2025 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்த... மேலும் பார்க்க