செய்திகள் :

ராகு - கேது பெயர்ச்சி 2025: சிம்மம்

post image

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற வேட்டை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!!

கிரகநிலை

26-04-2025 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-04-2025 அன்று கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

11-05-2025 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். உற்றார்-உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும்.

பணவரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் - வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக்கக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.

பொருளாதார நிலை

பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண்செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சி குறைவும் ஏற்படலாம். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார்-உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்னைகளை உண்டாக்கும்.

கொடுக்கல்-வாங்கல்

பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கொடுக்கல்-வாங்கலில் ஈடுபடுத்தும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண்பிரச்னைகளில் சிக்கிகொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறி நிலையிலிருக்கும்.

தொழில், வியாபாரம்

செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.

உத்தியோகம்

பணியில் சற்று கவனமுடன் செயல்படுவதும் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கையாள்வதும் நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக் கொள்ளவும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

அரசியல்

பெயர், புகழை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவைப் பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்துவிட முடியும். நீர்வரத்து தேவைக்கேற்றபடி இருக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றர்-உறவினர்களை அனுசரித்துச் செல்வது. வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமலிருப்பது நல்லது.

பெண்கள்

உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஓரளவுக்கு தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும்.

கலைஞர்கள்

கிடைத்த வாய்ப்புகளை கைநழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்

மாணவ-மாணவியர்

கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலத்தை அடையலாம். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் வீண் அலைச்சலையும், பிரச்னைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாடப் பணிகளில் உங்களின் தனித்திறனால் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள்.

மகம்

தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

பூரம்

அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும்.

உத்திரம் 1ம் பாதம்

கௌரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும். எல்லா பிரச்னைகளும் தீரும். மனகவலை அகலும்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும். சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவதைத் தவிர்க்கவும்.

மலர் பரிகாரம்

பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு எலுமிச்சை சாறு அர்ப்பணிக்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

ராகு - கேது பெயர்ச்சி 2025: மீனம்

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவிகரமாகத் திகழவேண்டுமென்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!!கிரகநிலை 26-04-2025 அன்று ராகு பகவான் ராசியில்... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: கும்பம்

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)எந்த பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்துவைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!கிரகநிலை 26-04-2025 அன்று ராகு ... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: மகரம்

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல்திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)எதிலும் போராடி வெற்றிபெறக்கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே!!கிரகநிலை26-04-2025 அன்று ராகு பகவா... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: தனுசு

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்முதல் பாதம் முடிய)கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வ பக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!!கிரகநிலை 26-04-2025 அன்று ராகு பகவா... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: விருச்சிகம்

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல்அனுஷம், கேட்டை முடிய)நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மனநிலையறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!கிரகநிலை26-04-2025 அன்று ராகு பகவான் பஞ்சம ஸ்தானத... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி 2025: துலாம்

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய அழகும், அறிவும் உடைய துலா ராசி அன்பர்களே!!கிரகநிலை26-04-2025 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்த... மேலும் பார்க்க