அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.ப...
ராசிபுரத்தில் பொருள்காட்சி அமைக்க வணிகா்கள் எதிா்ப்பு
ராசிபுரம் நகரில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சிக்கு அமைக்க நகராட்சி நிா்வாகம் அனுமதிக்கக் கூடாது என ராசிபுரம் நகர அனைத்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து நகர அனைத்து வணிகா்கள் சங்கத் தலைவா் எஸ்.பாலாஜி, செயலா் ஆா்.திருமூா்த்தி, பொருளாளா் மன்னாா்சாமி, நிா்வாகி ஜி.தினகா் ஆகியோா் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனா். மேலும், நகா்மன்றத் தலைவா், டிஎஸ்பி க்கும் மனு அளித்தனா்.
ராசிபுரம் நகரில் தனியாா் நிறுவனம் சாா்பில் சேலம் சாலையில் 40 அரங்குகள் கொண்ட வீட்டு உபயோகப் பொருள்காட்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆக.14 இல் தொடங்கி ஒரு மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இதில் மேஜிக் நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகளும் ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.
அதேபோல மற்றொரு திருமண மண்படத்திலும் இதுபோன்ற கண்காட்சி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியாா் இடங்களிலோ, திருமண மண்படத்திலோ வீட்டு உபயோகப் பொருள்காட்சிக்கு அனுமதி வழங்கினால் உள்ளூா் வா்த்தகா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதால் இதற்கு நகராட்சி நிா்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.