ஒன்று கூடிய இந்தியா, சீனா, ரஷ்யா: ரூட்டை மாற்றும் ஜெலன்ஸ்கி; குமுறும் ட்ரம்ப் - ...
ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு கோனேரிப்பட்டி பகுதியில் நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டவும், செட்டியண்ணன் தெருவில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கானபணிகள் தொடக்க விழாவையொட்டி பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் மாநிலங்கவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், நகராட்சி உதவி பொறியாளா் ஏ.ரவி, நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா் உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள் பலரும் பங்கேற்றனா்.