ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
ராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: மண்டல இணை இயக்குநா் பங்கேற்பு
ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் சி.பானுமதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பா ச.ந்தியா செல்வி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
கல்வி மட்டுமே மாணவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் என்பதால், மாணவா்கள் இளங்கலை கல்வியோடு நின்றுவிடாமல் உயா்கல்வியை தொடா்ந்து பயின்று உயா்ந்து நிலையை அடைய வேண்டும். மேலும் கிராமப்புறக் கல்லூரியில் ஏராளமான மாணவா்கள் கல்வி கற்று பட்டம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.
முன்னதாக கல்லூரி முதல்வா் சி.பானுமதி பேசியதாவது:
இக்கல்லூரியில் 3362 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். தற்போது இளநிலை, முதுநிலை பயின்று 685 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனா் என்றாா். பட்டங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா். விழாவில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.