செய்திகள் :

ராஜபாளையம்: ஒன்றரை ஆண்டுகளாக முடிக்கப்படாத பேருந்து நிலைய கட்டடப் பணிகள்... அவதியில் பயணிகள்!

post image

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம், இட நெருக்கடி காரணமாகவும், கட்டடத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவும், அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 2023 ஜனவரியில் தொடங்கப்பட்டது. சுமார் ரூ. 2.90 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

ராஜபாளையம்

அதுவரை, மாற்று ஏற்பாடாக ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க, கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையக் கட்டடம் 2024 ஜூன் மாதமே திறக்கப்படுவதாகப் பலகை வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை அது கட்டி முடிக்கப்படவில்லை. ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகியும் பணிகள் நிறைவு பெறாததால் பயணிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

தொடக்கத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டது. தற்போது அதுவும் முறையான பராமரிப்பின்றி கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது. பேருந்துக்காகக் காத்திருக்கும் பள்ளி மாணவிகள், பெண்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் எந்த அடிப்படை வசதியும் தற்போது வரை செய்து தரப்படாமல் தவிக்கவிடும் சூழல் உருவாகியிருக்கிறது. பேருந்துகளும் நகரின் பிரதான சாலையான காந்தி சிலை அருகே நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கிறார்கள்.

ராஜபாளையம்

மேலும், முறையான மின்விளக்கு வசதிகள் இல்லாததால் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியிருக்கிறது என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். புதிய கட்டடத்துக்கான வேலைகள் நிறைவு பெற்று, திறக்கும் வரை, பெண்களுக்கான மொபைல் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், முறையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் பயணிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. குறிப்பாக, மழை நேரங்களில் ஒதுங்கி நிற்பதற்குக் கூட இடம் இல்லாமல் சாலையில் நிற்பதாக வேதனை தெரிவிக்கும் பயணிகள், அரசின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நெல்லை: சேரும் சகதியுமான சாலைகள்; நடந்து செல்வதே சாகசம்தான்... அவதியில் ராதாபுரம் மக்கள்..!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட ப்ரைட் நகர் பகுதியில் சுமார் 120 வீடுகள் வரை இருக்கின்றன. இந்தக் குடியிருப்பு பகுதியில் உள்ள பாதைகள் அனைத்தும், முறையாகச் சாலைகள் அமைத்துத் தரப்படாமல், ... மேலும் பார்க்க

குமரி: திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே கட்டப்பட்டு வரும் கண்ணாடிப் பாலம்! | Album

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம்திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம்திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் மேலும் பார்க்க

``பணத்தை கேட்டால் பிணம்தான்... மிரட்டும் அமைச்சரின் உதவியாளர்'' - எஸ்.பி-யிடம் புகார் அளித்த பெண்

மயிலாடுதுறை சின்ன கண்ணாரத் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரான வேதா ஸ்ரீநிவாஸ் என்பவர்மீது ராணிப்பேட்டை எஸ்.பி-யிடம் புகார் மனு ஒன்றைக் க... மேலும் பார்க்க

“அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும்! ” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்பட... மேலும் பார்க்க

கிண்டி: "நலமுடன் இருக்கிறேன்; முதல்வரிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்..." - மருத்துவர் பாலாஜி

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜியை, விக்னேஸ்வரன் என்பவர் நேற்று (நவம்பர் 13) காலை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இ... மேலும் பார்க்க

தவறான பிரமாணப் பத்திரம்... அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது தேர்தல் குற்ற வழக்கு!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திட்டமிட்டு தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல... மேலும் பார்க்க