செய்திகள் :

ராஜஸ்தான்: "எங்களைப் போகவிடுங்க" - காதலனுடன் போலீஸ் ஜீப் மீது ஏறி நின்று ரகளை செய்த மைனர் பெண்

post image

ராஜஸ்தான் மாநிலம் கோடா என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரைக் காணவில்லை என்று கூறி அவரது பெற்றோர் போலீஸில் புகார் செய்து இருந்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் அப்பெண் தனது காதலனுடன் ராம்புரா என்ற இடத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீஸார் அங்குச் சென்று மைனர் பெண்ணையும், அவரது காதலனையும் போலீஸ் ஜீப் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர்.

போலீஸ் ஜீப் அருகில் வந்ததும், மைனர் பெண்ணை அவரது காதலன் போலீஸ் ஜீப் கூரையின் மீது ஏற்றிவிட்டார்.

பெண்ணின் காதலன் குடிபோதையிலிருந்தார். மைனர் பெண்ணை போலீஸ் ஜீப்பில் ஏற்றிவிட்ட பிறகு தானும் ஜீப் மேல் ஏறிக்கொண்டார். அவர்களை போலீஸார் கீழே இறங்கும்படி கூறினர்.

ஜீப் மேல் ஏறிக்கொண்ட பெண்ணும், அவரது காதலனும்
ஜீப் மேல் ஏறிக்கொண்ட பெண்ணும், அவரது காதலனும்

ஆனால் மைனர் பெண் பொதுமக்கள் முன்னிலையில் போலீஸாரைக் கண்டபடி திட்டினார். அவரது காதலன் மைனர் பெண்ணைக் கட்டிப்பிடித்தபடி இருந்தார். இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் போலீஸ் ஜீப்பில் நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனை அப்பகுதி மக்கள் சூழ்ந்து நின்று பார்த்தனர். அப்பெண் தங்களைச் செல்ல அனுமதிக்கும்படி கத்தினார்.

அப்பெண்ணை அவரது காதலன் அடிக்கடி கட்டிப்பிடித்தபடி இருந்தார். இது 10 நிமிடத்திற்கும் மேல் நீடித்தது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அப்படியே நின்றன. அதிலிருந்தவர்கள் இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்ததனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மிகவும் போராடி அவர்கள் இரண்டு பேரையும் போலீஸ் ஜீப் கூரையிலிருந்து கீழே இறக்கினர். அவர்கள் இரண்டு பேரையும் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

மைனர் பெண்ணின் 22 வயது காதலன் மீது மைனர் பெண்ணைக் கூட்டிச்சென்றது, பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல், தொந்தரவை உருவாக்குதல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

அவர்கள் பொது இடத்தில் போலீஸ் ஜீப் மீது ஏறி நின்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியிருக்கிறது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

திருமணத்தை மீறிய உறவு: ரூ.2.1 கோடியை கொடுத்துவிட்டு திரும்பக் கேட்ட பெண் - நீதிமன்றம் சொன்னதென்ன?

திருமணம் மீறிய உறவிற்காக பெண் தொழிலதிபர் ஒருவர் 2.1 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். ஆனால் அந்த உறவு ஓராண்டிலே முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரு... மேலும் பார்க்க

`காசா போரில் பாதித்தவர்களுக்காக'- சோசியல் மீடியா மூலம் ரூ.5 கோடி வசூல்; மும்பையில் சிக்கிய கும்பல்!

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக காசா முழுமையாக உருக்குலைந்து காணப்படுகிறது. காசாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வேலையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்... மேலும் பார்க்க

சென்னை: 150 ஆண்டுக்கால சேவையைக் கொண்டாடும் தியோசாபிகல் சொசைட்டி - இங்கு என்ன இருக்கிறது?

சென்னை அடையாறில் அமைந்துள்ள தியோசாபிகல் சொசைட்டி தனது 150வது ஆண்டுக்கால சேவையை நிறைவு செய்திருக்கிறது. சென்னை சலசலப்பில் இருந்து சற்றே தனித்திருக்கும் இந்த இடத்தில் பல்வேறு அடர்ந்த மரங்கள், விலங்கு மீ... மேலும் பார்க்க

``இந்தியரை திருமணம் செய்தபின் என் வாழ்வில் நடந்த 3 மாற்றங்கள்" - உக்ரைன் பெண்ணின் வீடியோ வைரல்

இந்திய இளைஞரை திருமணம் செய்த பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்பதை உக்ரேனியப் பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனைச் சேர்ந்த விக்டோரியாவும் இந்தியாவைச் சேர்ந்... மேலும் பார்க்க

VGP மரைன் கிங்டம்: இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள கொலு கண்காட்சி

சென்னையின் முதன்மையான கடல் மற்றும் நீர்வாழ் உயிர் பூங்காவான விஜிபி மரைன் கிங்டம் இந்தியாவிலேயே முதல் நீருக்கடியிலான நவராத்திரி கொலுவை பெருமையுடன் வழங்குகிறது. இந்த நிகழ்வு 21 செப்டம்பர் 2025 அன்று மால... மேலும் பார்க்க

H-1B: "ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டாம்" - அமெரிக்கா விளக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. அவரின் முடிவுகளால் அமெரிக்க மக்களே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்... மேலும் பார்க்க