குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
ராஜஸ்தான்: மாற்று சாதியினரின் எதிர்ப்பு; பட்டியலின மணமக்கள் குதிரையில் செல்ல 200 போலீஸார் பாதுகாப்பு
வடமாநிலங்களில் திருமண ஊர்வலத்தில் பட்டியலினத்தை சேர்ந்த மணமகன் அல்லது மணமகளை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வர மாற்று சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இது தொடர்பாக பிரச்னைகள் எழுந்துள்ளது.
இதையடுத்து ராஜஸ்தானில் அது போன்ற ஒரு பிரச்னை ஏற்படாமல் இருக்க, 200 போலீஸாரின் பாதுகாப்போடு மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஆஜ்மீர் மாவட்டத்தில் உள்ள லவேரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அருணா. இவருக்கு விஜய் என்பவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இக்கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திருமணத்தின் போது குதிரை ஊர்வலத்தில் செல்ல மாற்று சாதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பிரச்னை செய்து வந்தனர்.
இதையடுத்து திருமண ஊர்வலத்தில் எந்த வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க அருணாவின் தந்தை நாராயண் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திலும், போலீஸிலும் மனு கொடுத்திருந்தார்.
அதோடு உள்ளூர் சமூக ஆர்வலர்களிடமும் தெரிவித்திருந்தார். மனித உரிமை கமிஷனிலும் மனுக்கொடுக்கப்பட்டது. இதையடுத்து திருமணத்தன்று சம்பந்தப்பட்ட கிராமத்தில் 200 போலீஸார் குவிக்கப்பட்டனர். உயர் அதிகாரிகளும் கிராமத்தில் முகாமிட்டனர். இது குறித்து அஜ்மீர் மாவட்ட போலீஸ் அதிகாரி வந்திதா கூறுகையில்,''மணமகள் குடும்பத்தினர் திருமண ஊர்வலத்தில் சிலர் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும் என்று கூறி இருந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசினோம். திருமணத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கிராமத்தினர் தெரிவித்தனர். அதோடு திருமண ஊர்வலத்தால் தங்களுக்கு எந்த வித பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்போடு மணமகனின் குதிரை ஊர்வலம் நடந்தது'' என்றார்.
மொத்தம் 200 போலீஸார் இப்பாதுகாப்பில் ஈடுபட்டனர். திருமண ஊர்வலத்தில் பட்டாசு மற்றும் டிஜே நடன நிகழ்ச்சியை மணமகள் வீட்டார் தவிர்த்துவிட்டனர். அருணாவின் தந்தை நாராயண் இது குறித்து கூறுகையில், ''பயந்து கொண்டிருந்தால் இவை எப்படி நடக்கும். நாங்கள் படித்த குடும்பம். இதற்கு முன்பு திருமண ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடந்திருக்கிறது. எனவே போலீஸாரை அனுகினோம்'' என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs