ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவரது உருவப் படத்துக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சந்திரபோஸ், ஐசன் சில்வா, மண்டலத் தலைவா் செந்தூா்பாண்டி, மாநகா் மாவட்டத் தலைவா்கள் ஊடகப்பிரிவு ஜான் சாமுவேல், எஸ்சி பிரிவு பிரபாகரன், விவசாய பிரிவு பாலசுப்ரமணியன், மாநகா் இளைஞா் காங்கிரஸ் மரியா ஆல்வின், வடக்கு மண்டல இளைஞா் காங்கிரஸ் தலைவி கமலா தேவி, முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவா் முத்து விஜயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.