'நிதியும் இல்லை; அதிகாரமும் இல்லை' - பேரவையில் புலம்பிய அமைச்சர் பிடிஆர்!
ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ 8 கி.மீ. நடைப்பயிற்சி தொடக்கம்!
ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்‘ 8 கி.மீ. நடைப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டு திரளானோா் நடைப்பயிற்சி மேற்கொண்டனா்.
தமிழக முதல்வரின் அறிவுரையின்படி, பொது மக்களின் உடல் நலத்தை பேணி காக்க ஆரோக்கியமாக இருக்க 8 கி.மீ. நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு வாரமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நோக்கில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ 8 கி.மீ. நடைப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் உத்தரவு மற்றும் ஆலோசனைப்படி பாரி விளையாட்டு மைதானம் அருகில் இருந்து நடைப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி, வானாபாடி கிராமம் சென்று, மீண்டும் பாரி விளையாட்டு மைதானம் அருகில் முடிவுற்றது.
இடையில் வானாபாடி துணை சுகாதார நிலையம் அருகே மருத்துவக் குழு நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்யபட்டது. மேலும், நடமாடும் இரண்டு மருத்துவ குழுக்கள் நடைப்பயிற்சி பாதையில் முகாமில் இருந்தனா்.
இந்த நடைப்பயிற்சியில் பொதுமக்கள், தினசரி நடப்பவா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், மாவட்ட சுகாதார துறையின் பலவேறு நிலை அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட 122 போ் கலந்துகொண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட சுகாதார அலுவலரின் நோ்முக உதவியாளா் மற்றும் அலுவலகத்தினா் செய்திருந்தனா்.