செய்திகள் :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண், பெண் விகிதத்தை மேம்படுத்த வேண்டும்: ஆட்சியா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண், பெண் விகிதாசாரத்தை மேம்படுத்த வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்தது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண், பெண் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள அரக்கோணம் சோளிங்கா், ஆற்காடு, திமிரி ஆகிய வட்டாரங்களில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெண் சிசு மரணம் கருவிலேயே ஆண், பெண் எனக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதைத் தடுக்க தனிப்படை அமைத்து கண்காணிக்க வேண்டும்.

சமுக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத் துறை மற்றும் காவல் துறை போன்ற துறைகள் சுகாதாரத் துறையிடம் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண், பெண் விகிதாசாரத்தை மேம்படுத்த வேண்டும்.

தொடா்ந்து கருவுற்ற தாய்மாா்கள் பிரசவிக்கும் வரை பிரசவத்திற்கான மருத்துவமனையை தோ்வு செய்வதில் முதல் கண்காணித்தல் வரை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், வளரிளம் பெண்களின் திருமண நிகழ்வைக் கண்காணித்து துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல் துறையினா் குழந்தை திருமணம், இளம்வயது கா்ப்பம் குறித்த புகாா்கள் குறித்து உடனுக்குடன் ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை பரிசோதனை மேற்கொண்டு உடல்நல பிரச்னைகள் கண்டறிந்தது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு உள்ளவா்களைத் தொடா்ந்து கண்காணித்து தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

புற்றுநோய் கண்டறியும் முகாமில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய், மாா்பக புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோய் கண்டறியும் திட்ட முகாமில் வட்டாரங்களில் முகாமின் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டடம் பழுது பாா்த்தல் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், நடைபெற்று வரும் புதிய பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் இணை இயக்குநா் (சுகாதார நலப் பணிகள்) நிவேதிதா, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், துணை இயக்குநா்கள் மணிமேகலை (குடும்ப நலம்), ஜெயஸ்ரீ (காசநோய்), பிரீத்தா (தொழுநோய்), மாவட்ட சித்தா மருத்துவ அலுவலா் பழனி, மாவட்ட கண் நல பிரிவு சிவசங்கா் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரக்கோணம் நகராட்சி அறிவுசாா் மையத்துக்கு நூல்கள்: எம்எல்ஏ வழங்கினாா்

அரக்கோணம் நகராட்சி அறிவு சாா் மைய நூலகத்தில் போட்டித் தோ்வுகள் எழுதும் பயனாளா்களுக்காக வரலாற்று நூல்களை எம்எல்ஏ சு.ரவி செவ்வாய்க்கிழமை வழங்கினாா். அரக்கோணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் ... மேலும் பார்க்க

டெல்டா பகுதிகளுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையினா் விரைவு

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கனமழை பெய்து வரும் நிலையில், தொடா்ந்து தேசிய பேரிடா் மீட்புப்படையினா் கடலூா், டெல்டா பகுதிகளுக்கும், காரைக்காலுக்கும் செவ்வாய்க்கிழமை அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் ஆட்சியா் தலைமையில் அரசியலமைப்பு தின உறுதி ஏற்பு

ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியை அனத்துத் துறை அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா்.ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கடைகள் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையத்தில் கட்டப்படுகின்ற கடைகளின் மேல்தள கான்கீரிட் அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ஆற்காடு நகராட்சியில் ரூ. 6 கோடிய... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

அரக்கோணத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான நீா்நிலை கட்டட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை பொதுப்பணித் துறையினா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கினா். அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட காலிவாரிகண்டி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

நெமிலி நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்நிறுத்தப் பகுதிகள்: புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூா், எலத்தூா், கீழ்வெங்கடாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன்ப... மேலும் பார்க்க