டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
ராணுவ அதிகாரி வேஷம்: `பாலியல் வன்கொடுமை செய்ய நாடகம்' - போலீஸில் சிக்கிய இளைஞர்
பெண் மருத்துவருடன் பழக இராணுவ அதிகாரி போல வேடமிட்ட டெலிவரி முகவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியில் உள்ள சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரவ் மாலிக் (27). இவர் தனியார் வணிக நிறுவனத்தில் டெலிவரி முகவராக பணியாற்றி வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் டெல்லியின் முன்னணி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவருடன் பழகி வந்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இருவரும் நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் மருத்துவரை அவருடைய இல்லத்தில் சந்திக்க திட்டம் தீட்டிருக்கின்றார். அதன் அடிப்படையில், மருத்துவரின் இல்லத்துக்கு இராணுவ அதிகாரிப் போன்ற உடை அணிந்து வந்திருக்கிறார் ஆரவ்.

இருவரும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆரவ்வின் செயல்பாடுகள் மீது சந்தேகமடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் காவல்துறை ஆரவ்வை கைது செய்திருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, ``குற்றம் சாட்டப்பட்டவர் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து ராணுவ சீருடையை ஆன்லைனில் வாங்கியது தெரியவந்தது. ஆரவ்வுக்கு இந்திய ராணுவத்துடன் எந்த தொடர்பும் இல்லை.
மருத்துவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக சீருடையில் இருக்கும் தனது புகைப்படங்களையும் அவருக்கு அனுப்பியிருக்கிறார். பின்னர், அந்த மருத்துவரின் வீட்டிற்குச் சென்று, அவருக்கு எதையோ சாப்பிடக் கொடுத்து பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
















