செய்திகள் :

ராணுவ உடையில் வந்தவர்கள் கைவரிசை: SBI ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை

post image

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சடாச்சன் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளைக்குள் மூன்று பேர் திடீரென நுழைந்தனர். அவர்கள் ராணுவ சீருடையில் இருந்தனர். அவர்களது கையில் ஆயுதங்கள் இருந்தன. முகமூடி அணிந்து வந்த அவர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த வாடிக்கையாளர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களின் கை மற்றும் கால்களை கட்டி கழிவறையில் போட்டு அடைத்தனர். பின்னர் வங்கி மேலாளரிடம் பணம் இருக்கும் லாக்கர் அறையை திறக்கும்படி சொன்னார்கள். அதில் இருந்த ரூ. 1 கோடியை எடுத்துக்கொண்டார்கள். பின்னர் அங்கிருந்த லாக்கரை திறக்கச் சொல்லி தங்க நகைகளையும் கொள்ளையடித்தனர்.

தங்கம் மற்றும் நகைகள் இருந்த லாக்கரை திறக்கவில்லையெனில் சுட்டுக்கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் வேறு வழியில்லாமல் ஊழியர்கள் லாக்கரை திறந்தனர்.

SBI
SBI

கொள்ளையர்கள் பணம் மற்றும் தங்கம் இருந்த பைகளுடன் வெளியில் நிறுத்தி இருந்த வேனில் தப்பிச்சென்றனர். இது குறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கொள்ளையர்கள் தப்பிச்சென்ற வேன் நம்பர் பிளேட் போலியானது என்று தெரிய வந்தது.

அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூர் நோக்கி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் சோலாப்பூர் மாவட்டத்திற்குள் நுழைந்தவுடன் இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மோதிக்கொண்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்துடன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். வங்கியில் வாடிக்கையாளர்களின் 425 தங்க பாக்கெட்கள் இருந்தது. அதில் 398 பாக்கெட்களை எடுத்துச்சென்றுவிட்டனர். அவை மொத்தம் 20 கிலோ என்று தெரிய வந்துள்ளது.

அவற்றின் மதிப்பு ரூ.20 கோடியாகும். கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தங்க நகைகளை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. கடந்த மே மாதம் இதே விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கனரா வங்கியில் 59 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

ஜப்பானில் தரையிறங்கிய போலி கால்பந்து அணி - நாடுகடத்திய அதிகாரிகள்! - என்ன நடந்தது?

பாகிஸ்தானிலிருந்து கால்பந்து விளையாட்டு வீரர்கள் போல ஜப்பானுக்குள் நுழைய முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாகிஸ்தானின் சியல்கோட் விமான நிலையத்திலிருந்து ஜப்பான் சென்றடைந்த கால்பந்தாட்ட குழு மீது... மேலும் பார்க்க

சேலம்: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்; இருவர் கைதின் பின்னணி என்ன?

சேலம் மாநகரில் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சேலம் உயிரியல் பூங்காவிலிருந்து ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தில் ஓட்டுநராக தனபால் என்பவரும், நடத்துநராக திர... மேலும் பார்க்க

10 வருட காதலுக்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு; இளைஞர் ஆணவப் படுகொலை - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவில் வசிப்பவர் குமார். இவருக்கு வைரமுத்து (28) என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். வைரமுத்து டூவீலர் மெக்கானிக். அதே பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம் பெண்.... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் திருட்டு; தலைமை அர்ச்சகர் தலைமறைவு

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பலரால் கோயிலுக்கு வெள்ளி குடங்கள், வாளிகள், தாம்பூலங்கள், பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன... மேலும் பார்க்க

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த தாய்; மகள் காதலுக்கு எதிர்ப்பு - ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர்

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்த குமார்-ராஜலட்சுமி தம்பதியரின் மகன் வைரமுத்து, டிப்ளமோ படித்தவுடன் டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குமார்-வ... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாக நகை, பணம் வாங்கி அதிகாரி ஏமாற்றிவிட்டார்: வேலை கேட்டு மனு அளித்த கைம்பெண் தற்கொலை!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி பகுதியை சேர்ந்தவர் ரமணி(41). இவரது கணவர் அஜிகுமார். குலசேகரம் சந்தை பகுதியில் நகைக்கடை நடத்தி வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்கள... மேலும் பார்க்க