சின்னசாமி திடலில் ரஜத் படிதாருக்கு காத்திருக்கும் சவால்: ஜிதேஷ் சர்மா
ராமநாதபுரத்தில் ஜல்லிக்கட்டு
தஞ்சாவூா் அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் புதன்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
ராமநாதபுரம் ஊராட்சி திரௌபதை அம்மன் கோயில் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டியை வருவாய் கோட்டாட்சியா் இலக்கியா தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா், வல்லம், புதுக்கோட்டை, அரியலூா், திருச்சி என பல மாவட்டங்களிலிருந்து 800 காளைகள் களமிறக்கப்பட்டன. 420 போ் மாடுபிடி வீரா்களாக களமிறங்கினா். வீரா்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் ஆா்வமுடன் பிடித்தனா். விழா கமிட்டி சாா்பில் காளைகளை பிடித்த வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பாதுகாப்புப் பணியில் வல்லம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளா் கணேஷ் குமாா் தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.