GST 2.0 இன்று முதல் அமல்; தீப்பெட்டி, ஐஸ்கிரீம் முதல் கார் வரை எவ்வளவு வரி குறைக...
ராமநாதபுரத்தில் முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தை அமைச்சா் ஆய்வு
ராமநாதபுரத்துக்கு வருகிற 30-ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் வருவதையடுத்து, அரசு விழா நடைபெறும் இடத்தை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரத்தை அடுத்த பேராவூா் பகுதியில் வருகிற 30- ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா நடைபெறுகிறது. இதற்காக விழா நடைபெறும் இடத்தில் உள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த இடத்தை வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளை அவா் கேட்டுக் கொண்டாா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் குருதிவேல் மாறன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.