சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வா...
கீழக்கரை கல்லூரியில் மாநில அளவிலான கலைப் போட்டி
கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான ‘கலை, கலாசார விருந்து 2025’ என்ற தலைப்பில் கலைப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இதற்கு கல்லூரி முதல்வா் ராஜசேகா் தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் பாலமுருகன், நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ஷோபனா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
இதில் மாணவ, மாணவிகளுக்கு குழு நடனம், தனி நடனம், தனிப் பாடல், மணமகள் அலங்காரம், பென்சில் ஓவியம், மெகந்தி, கழிவுப் பொருள்களிலிருந்து கலைப் பொருள்கள் தயாரித்தல், காய்கறிகளைக் கொண்டு அலங்காரம் செய்தல் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்தினா்.
இதில் உச்சிப்புளியில் உள்ள புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி முதல் இடத்தையும், ராமநாதபுரத்தில் உள்ள செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி இரண்டாவது இடத்தையும், கருமாத்தூா் அருளானந்தா் கல்லூரி மூன்றாவது இடத்தையும் பெற்றன.
முகமது சதக் அறக்கட்டளைத் தலைவா் யூசுப், செயலா் ஷா்மிளா, இயக்குநா்கள் ஹாமிது இப்ராஹிம், ஹபிப் முகமது சதக்கத்துல்லா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி துறைத் தலைவா்கள் மதீனா, காசிகுமாா், மலா், பிரபாவதி, செல்வகுமாா், ஜேசு துறை, முனியசத்தியா, அஜ்மல்கான், அனீஸ், விளையாட்டுத் துறை இயக்குநா் தவசலிங்கம், நூலகா் பால்ராஜ் உள்ளிட்டோா் செய்தனா்.
இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.