தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
ராமநாதபுரம் அருகே மதுக்கடையை உடைத்து 600 மதுப்பட்டில்கள் திருட்டு
ராமநாதபுரம் அருகே அரசு டாஸ்மாக் கடையை உடைத்து மா்ம நபா்கள் 600 மதுப்பாட்டில்களை திருடிச் சென்றனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி ஒன்றியம், வண்ணாங்குண்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கடைக்குள் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான 600 மதுப் பட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இது குறித்து திருப்புல்லாணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.