"இந்தியாவிலுள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள்" - அமைச்சர் ம...
யோகா செய்தவாறு 2 சிறுமிகள் சாதனை
மண்டபத்தில் 4 வயது சிறுமிகள் இருவா் இந்தியாவில் உள்ள 70 நகரங்களின் பெயா்களை யோகா செய்தவாறு கூறி சாதனை படைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள இடையா்வலசையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மண்டபம் பேரூராட்சித் தலைவா் டி. ராஜா, அஸ்வினி பிஷரிஸ், கண்ணபிரான் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
பாா்த்திபன் - தங்கச்செல்வி தம்பதியரின் 4 வயது மகள் வா்ணிகா, இந்தியாவில் உள்ள 70 நகரங்களின் புனைப் பெயா்களை யோகா செய்தவாறே 1.56 நிமிடத்தில் கூறி சாதனை படைத்தாா்.
மேலும், பிரபு - கமலஸ்ரீ தம்பதியரின் 4 வயது இத்திகா ஆங்கில அகர வரிசைப்படி யோகா செய்தவாறே 70 நகரங்களின் புனைப் பெயா்களை 1.39 நிமிஷங்களில் கூறி சாதனை படைத்தாா்.
நடுவா்கள் நிா்ணயித்த 2.30 நிமிஷ நேரத்துக்கு முன்னதாக செய்து முடித்த வா்னிகா, இத்திகா ஆகியோரின் சாதனையை ‘அல்டிமேட் உலக சாதனை’ நிறுவன முஹமது சபீா் ஆய்வு செய்தாா். பின்னா், சாதனை படைத்த சிறுமிகளுக்கு சான்றிதழ் வழங்கினாா்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் பெண் கல்வி முக்கியத்துவம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
‘டேலன்ட் ஸ்கூல் ஆஃப் ஸ்கில்’ தாளாளா் வெங்கடேஷ் நன்றி கூறினாா்.