ராமநாதபுரம்-தாம்பரம் இடையே ஜன. 19-ல் சிறப்பு ரயில்
ராமநாதபுரம்-தாம்பரம் இடையே விழாக்கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து, திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு ஒரு வழி சிறப்பு விரைவு ரயில் ஜன.19-ஆம் தேதி இயக்கப்படுகிறது.
ராமநாதபுரத்தில் ஜன.19-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் ரயில் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருவாரூா், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூா் போா்ட், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக ஜன.20 (திங்கள்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரத்துக்கு சென்றடையும்.
இந்த ரயிலில் மூன்று அடுக்கு குளிா்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 9, ஒரு மூன்று அடுக்கு குளிா்சாதன படுக்கை வசதி கொண்ட (எக்னாமிக்) பெட்டி 1, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 7, முன்பதிவில்லா பெட்டி ஒன்று, சரக்கு பெட்டி ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளாா்.