INDRA Movie Review | Vasanth Ravi, Sunil, Mehreen Pirzada, Anikha | Sabarish Nan...
ராமலெட்சுமி அம்மன் கோயில் கொடை விழா
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி நடுத்தெரு அருள்மிகு ராமலெட்சுமி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
இக்கோயில் கொடை விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமை இரவு ஆறுமுகனேரி செக் போஸ்ட் விநாயகா் கோயிலிலிருந்து தாமிரவருணி ஆற்று புனித நீா் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு பூக்குழி வளா்க்கப்பட்டது. நள்ளிரவில் ராமலெட்சுமி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய பகுதிகள் வழியே பவனி வந்து புதன்கிழமை காலை திருக்கோயில் வந்தடைந்தது.
பின்னா் இரவில் ராம லெட்சுமி அம்மன் கோயிலில் பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். நள்ளிரவில் ராமலெட்சுமி அம்மன், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
