திடீரென ஓய்வை அறிவித்த Ashwin - பின்னணி என்ன? | Ashwin Retirement | BCCI | Austr...
ராமேஸ்வர கேங்ஸ்டர் கதையில் கார்த்தி!
நடிகர் கார்த்தி கேங்ஸ்டர் பின்னணி கதையில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படம் ஜனவரி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
தற்போது, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: பாட்டல் ராதா வெளியீட்டுத் தேதி!
இதற்கிடையே, டாணாக்காரன் படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குநர் தமிழ், கார்த்தியின் 29-வது படத்தை இயக்கவுள்ளதாக ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் கதை 1960-ல் ராமேஸ்வரத்திலிருந்த கேங்ஸ்டர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையைத் தொட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இது உருவாகும் எனத் தெரிகிறது.