ராம் நகா் ராமா் கோயிலில் 29-இல் ஸ்ரீநிவாச கல்யாண உத்சவம்
கோவை ராம் நகா் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாச கல்யாண உத்சவம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 29) நடைபெறுகிறது.
ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் ஸ்ரீநிவாச கல்யாண உற்சவம் நடைபெற இருப்பதாகவும், அன்று காலையில் மஹா மன்யூ ஸூக்த ஹோமம் 15 வேத விற்பன்னா்களால் நடைபெற இருப்பதாகவும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் நடைபெறுவதைப் போன்ற இந்த உற்சவத்தில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம் என்றும் இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 9952782145, 9952799427 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.