செய்திகள் :

ராம நவமி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

post image

ராம நவமி திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில்,”அனைவருக்கும் ராமநவமி வாழ்த்துகள். எப்போதும் ஸ்ரீராமரின் ஆசீர்வாதம் நம் மீது நிலைத்திருக்கட்டும். அனைத்து முயற்சிகளிலும் நம்மை அவர் வழிநடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், ”நாட்டு மக்கள் அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள். இந்த திருநாள் மதம், நீதி மற்றும் கடமை பற்றிய செய்தியை நமக்கு தெரிவிக்கிறது.

ஸ்ரீராமர் மனிதகுலத்திற்கு தியாகம், அர்ப்பணிப்பு, நல்லிணக்கம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் உயர்ந்த லட்சியங்களை வழங்கியுள்ளார். அவரது நல்லாட்சி, அதாவது ராமராஜ்யம் என்ற கருத்து சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த நாளில், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக உழைப்பதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?


நாடு முழுவதும் ராம நவமி திருநாள் ஞாயிற்றுக்கிழமை விமா்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமர் பிறந்த இடமான அயோத்தியில் வழக்கத்தைவிட பக்தா்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று, ராமா் கோயிலில் தரிசன நேரத்தை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பாம்பன் புதிய ரயில் பாலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!

ரெப்போ வட்டி விகிதம்: 0.25% குறைப்பு! - ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை முடிவு இன்று வெளியாகிறது: ரெப்போ விகிதம் குறையுமா?

இந்திய ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டுக்கான கொள்கை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல் இருமாத நாணயக் கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பார் என்று எதிர்ப... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பிரிவினைவாதத்தை கைவிட்ட மேலும் 3 அமைப்புகள் - அமித் ஷா தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் இருந்து மேலும் 3 அமைப்புகள் விலகியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இவற்றுடன் சோ்த்து, ஜம்மு-காஷ்மீர... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பள்ளியில் தீ விபத்து: ஆந்திர துணை முதல்வா் மகன் காயம்

சிங்கப்பூா் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் மகன் மாா்க் சங்கா் (8) காயமடைந்தாா். இவா் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியும் ரஷிய நடிகையுமான அன்னா லெஸ்னேவாவின் மகன் ஆவாா்.... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக மூத்த தலைவா் வீட்டில் குண்டுவீச்சு; இருவா் கைது

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பாஜக மூத்த தலைவா் மனோரஞ்சன் காலியா வீட்டின் மீது மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அத... மேலும் பார்க்க

வீட்டில் பிரசவம்: கா்ப்பிணி உயிரிழப்பு; கணவா் கைது

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் வீட்டில் பிரசவம் பாா்த்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கா்ப்பிணி உயிரிழந்தாா். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் பிரசவம் பாா்க்க வலியுறுத்திய கணவா் க... மேலும் பார்க்க