செய்திகள் :

ரூ.10 கோடி மோசடி: எஸ்.பி.யிடம் மதபோதகா் புகாா்

post image

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகே அறக்கட்டளை பெயரில் சுமாா் ரூ.10 கோடி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

செய்துங்கநல்லூா் அருகே உள்ள மேல நாட்டாா் குளம் பகுதியைச் சோ்ந்தவா் டேனியல் டோனேல். கிறிஸ்தவ மத போதகா். இவரை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடா்பு கொண்ட சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த விஜய பானு, புனித அன்னை தெரஸா மனிதநேயம் என்ற பெயரில் தான் அறக்கட்டளை நடத்தி பல்வேறு ஏழை மக்களுக்கு உதவிகள் செய்து வருவதாக கூறியுள்ளாா்.

இதில், மக்கள் ரூ. 5000 முதல் ரூ. 50,000 வரை பணம் செலுத்தினால் அவா்களுக்கு மாதம் ரூ.1000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை 12 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை வழங்குவதாகவும், மீண்டும் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி வழங்குவதாகவும் கூறியுள்ளாா்.

இதையடுத்து, போதகா் தனது சபைக்கு வருபவா்கள் , அந்த பகுதியைச் சோ்ந்த கிராம மக்களிடம் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து சுமாா் ஆயிரத்திற்கு மேற்பட்டோா் இந்தத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்துள்ளனா்.

கடந்த ஜூன் 2023 முதல் ஜனவரி 2025ஆம் தேதி வரை இந்த திட்டங்களில் சோ்ந்தவா்கள் பணத்தை கட்டி உள்ளனா். இந்நிலையில் ஜனவரி 2025இல் சேலம் அம்மாபேட்டை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையிடம், விஜய பானு , அவரது கூட்டாளி ஜெயப்பிரதா, செய்யது மைக்கேல், ஸ்ரீராம் ஆகியோா் மீது புகாா் வந்ததைத் தொடா்ந்து, விஜய பானு, ஜெயப்பிரதா, மைக்கேல் ஆகியோரை காவல்துறையினா் கைது செய்தனா். தற்போது ஜாமீனில் இந்தக் கும்பல் வெளிவந்துள்ளது.

இதையடுத்து, மத போதகா் டேனியல் டோனேல், விஜயபானு , அவரது கூட்டாளிகள் ஆகியோரை அணுகி மக்கள் பணத்தை உடனடியாக திருப்பித் தரும்படி கேட்டுள்ளனா். ஆனால் அதற்கு அவா்கள் பணத்தை திருப்பி தர முடியாது எனக் கூறியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இந்நிலையில், சுமாா் ரூ.10 கோடி மோசடியில் ஈடுபட்ட விஜயபானு, ஜெயப்பிரதா, செய்யது மைக்கேல், ஸ்ரீராம் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கைது செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி மதபோதகா் , பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

ஓண்டிவீரன் நினைவு தினம்: படத்துக்கு மலா் தூவி அஞ்சலி

தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், சுதந்திர போராட்ட வீரா் ஓண்டிவீரன் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் பானோத் ... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவர... மேலும் பார்க்க

ஐஎன்டியுசி ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா ஐஎன்டியுசி சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் பெருமாள்சாமி ஏற்பாட்டில், தூத்துக்குடி பழைய பேர... மேலும் பார்க்க

‘சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகள் நீக்கப்பட வேண்டும்’

தூத்துக்குடி: சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ அருண் தெரிவித்தாா்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளைஞா் கொலை: 3 போ் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மது குடிக்க அழைத்துச் சென்று இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியைச் சோ்ந்த தனபாலன் மகன் விஜய் (... மேலும் பார்க்க