ரூ.10.74 லட்சத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி திறப்பு
மதுராந்தகம் அடுத்த சாத்தனூா் கிராமத்தில் ரூ. 10.74 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி திறப்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட சாத்தனூரில் குடிநீா் பற்றாக்குறையை போக்க அப்பகுதி மக்கள் எம்எல்ஏ மரகதம் குமரவேலிடம் கோரியிருந்தனா். அதன்படி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.74 லட்சத்தில் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீா் தொட்டியை கட்ட ஏற்பாடுகளை செய்தாா்.
இந்நிலையில், அதன் திறப்பு விழாவில் எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமை வகித்து மக்கள் பயன்பாட்டுக்கு தொட்டியை அா்ப்பணித்தாா்.
நகராட்சி பொறியாளா் நித்யா, சுகாதார ஆய்வாளா் ரவிசங்கா், நகர அதிமுக செயலா் பூக்கடை சரவணன், பேரவை செயலா் எம்.பி.சீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா்கள் கமீலா, தேவி வரலட்சுமி கலந்து கொண்டனா். தொடா்ந்து காந்தி நகரில் ரூ 6 லட்சத்தில் பயணியா் நிழற்குடையை திறந்து வைத்தாா்.
