செய்திகள் :

ரூ.100 கோடி வசூலித்த துடரும்!

post image

நடிகர் மோகன்லாலின் துடரும் திரைப்படம் ரூ. 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படம் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதற்கிடையே, ’சவுதி வெள்ளக்கா' பட இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த ’துடரும்’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்தது.

கார் ஓட்டுநரான மோகன்லால் தன் மனைவி குழந்தைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார். இந்தச் சூழலில் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்னையும் அதன் தீர்வுகளுமாக உருவான இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

குடும்பப் பின்னணியில் எமோஷனல் கதையைப் பேசிய இப்படம் மோகன்லாலின் நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இப்படம் வெளியான 6 நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூலைப் பெற்று அசத்தியுள்ளது. இந்த வார இறுதியில் மேலும் வசூலைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: சசிகுமார், நானிக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அஜித் குமார்!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நடிகர் அஜித் குமார், வீடு திரும்பினார். திடீர் உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித் குமார் இன்று... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முனோட்ட விடியோ!

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், ய... மேலும் பார்க்க

பிரேமலு பிரபலங்கள் நிறைந்த ’ப்ரோமான்ஸ்’-ன் ஓடிடி வெளியீடு!

‘ப்ரோமான்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்குநர் அருண் டி. ஜோஸ் இயக்கத்தில் நடிகர்கள் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், ஷியாம் மோஹன் மற்றும் மஹிமா ந... மேலும் பார்க்க

ஒசாகா திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக அஜித், லியோ படத்துக்கு 6 விருதுகள்!

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் அஜித், த்ரிஷாவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2005ஆம் ஆண்டுமுதல் விருதுகளை வழங்கி வருகின்றன. தற்போத... மேலும் பார்க்க