செய்திகள் :

ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் டிராகன்!

post image

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் ரூ. 100 கோடி வசூலை நெருங்கவுள்ளது.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்.21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இன்றையகால இளைஞர்களுக்கு ஏற்றப்படி கதையும் காட்சிகளும் இருந்ததால் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால், முதல் மூன்று நாள்களிலேயே உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

இதையும் படிக்க: குட் பேட் அக்லி டீசர் சாதனை!

இந்தியளவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவுள்ளது.

இந்த நிலையில், இதுவரை இப்படம் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் ரூ. 100 கோடியை வசூலிக்கலாம் எனத் தெரிகிறது.

சிகரெட் பிடிக்கும் காட்சியில் ஜோதிகா!

நடிகை ஜோதிகா இணையத் தொடர் ஒன்றில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார்.நடிகை ஜோதிகா மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். இறுதியாக, தமிழில் உடன் பிறப்பே படத்தில் நடித்தவர், அடுத்ததாக மல... மேலும் பார்க்க

தண்டேல் ஓடிடி தேதி!

நாக சைதன்யா நடிப்பில் வெளியான தண்டேல் படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் பிப்.7 ஆம் த... மேலும் பார்க்க

பிரபாஸுக்கு ஜோடியாகும் இளம் பிரபலம்!

நடிகர் பிரபாஸின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.பாகுபலி, சலார் படங்களின் பிரம்மாண்ட வெற்றியால் இந்தியளவில் முன்னணி நடிகராக பிரபாஸ் மாற... மேலும் பார்க்க

நியூஸி. முதலில் பந்துவீச்சு: இந்தியா திணறல் தொடக்கம்!

துபை : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியாவும் நியூஸிலாந்தும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இவ்விரு அணிகளுமே ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டதால், இந்த ஆட்டத்தின் முடிவு... மேலும் பார்க்க

மோகன்லாலுக்கு வில்லனாகும் வாய்ப்பை மறுத்த ஜீவா!

நடிகர் மோகன்லால் படத்தில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை ஜீவா மறுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான வெற்றிப்படங்கள் அமையவில்லை. இவர் நடித்த பிள... மேலும் பார்க்க

ஓடிடியில் சங்கராந்திகி வஸ்துனம்!

தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டரான சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் சங்கராந்தி வெளியீடாக ஜன. 14 ஆம் தேதி திரை... மேலும் பார்க்க