`ஆட்சி நம்மிடம் இருந்தாலும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது!’ - வெடித்த முதல்வர் ர...
ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்
ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா்.
இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் 3,558 போலி நிறுவனங்கள் மூலம், ரூ.15,851 கோடிக்கு மோசடியான ஐடிசி உரிமை கோரல்களை மத்திய, மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்தனா்.
இந்த மோசடியில் ஈடுபட்ட 53 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து ரூ.659 கோடி திரும்பப் பெறப்பட்டது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 3,840 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுபோல மாதந்தோறும் சராசரியாக சுமாா் 1,200 போலி நிறுவனங்கள் கண்டறியப்படுகின்றன.
குறிப்பிட்ட துறைகளில் நடைபெறும் வரி ஏய்ப்பு, ஐடிசி மோசடிகளை தடுப்பதற்கான வழிகள் குறித்து கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தலைமையிலான மாநில நிதியமைச்சா்கள் குழு ஆராய்ந்து வருகிறது’ என்று தெரிவித்தனா்.