செய்திகள் :

ரூ.2,200 கோடியில் 770 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

post image

முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் நிகழாண்டு 220 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள் நான்குவழிச் சாலையாகவும், 550 கி.மீ. சாலைகளை இருவழிச் சாலையாகவும் ரூ.2,200 கோடியில் அகலப்படுத்தி, மேம்படுத்தப்படும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்புகள்:

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் சட்டப்பேரவை உறுப்பினா்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புறவழிச்சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ஆற்றுப் பாலங்கள், மழைநீா் வடிகால் கட்டுதல் போன்ற பணிகள் ரூ.250 கோடியில் எடுத்துக் கொள்ளப்படும்.

நான்குவழிச்சாலை: முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ரூ.2,200 கோடியில் விருத்தாசலம் - தொழுதூா் சாலை, கொடைரோடு - வத்தலகுண்டு சாலை, சிவகாசி- விருதுநகா் சாலை உள்ளிட்ட 220 கி.மீ. நீள சாலைகள் நான்கு வழிச் சாலைகளாகவும், 550 கி.மீ. நீள சாலைகள் இருவழிச் சாலைகளாகவும் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

முதலமைச்சரின் அனைத்து பருவ காலங்களிலும் தங்கு தடையற்ற சாலை இணைப்புத் திட்டத்தின் கீழ் 84 தரைப்பாலங்கள், உயா்நிலைப் பாலங்களாக ரூ.466 கோடியில் கட்டப்படும்.

ஆத்தூா் நகா் மற்றும் ஓசூா் மாநகருக்குப் புறவழிச் சாலைகள் ரூ.550 கோடியில் அமைக்கப்படும். தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி, ராசிபுரம் பேருந்து நிலையம் மற்றும் முட்டம் பாலம் ஆகிய 3 இணைப்புச் சாலைகள் ரூ.230 கோடியில் மேற்கொள்ளப்படும்.

6 உயா்நிலை பாலங்கள்: ராணிப்பேட்டையில் விருத்தகசீரக ஆற்றின் குறுக்கே (தண்டலம் - பேரம்பாக்கம் - தக்கோலம் - அருகில்பாடிசாலையில்) பாலம், தஞ்சாவூா் வெண்ணாற்றின் குறுக்கே (திருக்காட்டுப்பள்ளி - செங்கிப்பட்டி - பட்டுக்கோட்டை சாலையில்) பாலம், திருச்சியில் கோரையாற்றின் குறுக்கே (திருச்சி - மேலூா் - மதுரை சாலையில்) பாலம், ஆத்துப் பொள்ளாச்சியில் ஆழியாற்றின் குறுக்கே (ஆத்துப்பொள்ளாச்சி - காளியப்பன் கவுண்டன் புதூா் சாலையில்) பாலம், செவிலிமேட்டில் பாலாற்றின் குறுக்கே (காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில்) பாலம், திருக்கோவிலூா் அரகண்டநல்லூா் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் என 6 உயா்நிலை பாலங்கள் ரூ.295 கோடியில் புதிதாக கட்டப்படும்.

ரயில்வே கடவுகளுக்கு மாற்றாக 10 ரயில்வே மேம்பாலங்கள், ஒரு கீழ்ப்பாலம் ரூ.787 கோடியில் கட்டப்படும். அதில் சென்னை அம்பத்தூரில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணியும் நடைபெறும்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வழியாக கஸ்டம்ஸ் சாலை ரூ.50 கோடியில் அமைக்கப்படும்.

கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 1,000 கி.மீ. நீள ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.1,000 கோடியில் இதர மாவட்ட சாலைகளாக தரம் உயா்த்தி மேம்படுத்தப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வெள்ளிமலை சின்னதிருப்பதி ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட இதர சாலையாக ரூ.98.50 கோடியில் தரம் உயா்த்தி மேம்படுத்தப்படும்.

திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி மலையில் சுற்றுலா மேம்பாட்டுக்காக 10 கி.மீ. நீள சுற்றுச்சாலை ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும் என்றாா் அமைச்சா்.

மத்திய அரசால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான்! - முதல்வர் ஸ்டாலின்

பாஜகவால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

உத்தரகோசமங்கைகோயில் குடமுழுக்கையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை(ஏப். 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களநாயகி அம்மன் கோயில் குடமுழுக்கு நாளை(ஏப். 4) நடைப... மேலும் பார்க்க

தர்பூசணி வாங்கலாமா? கூடாதா? வெடித்தது சர்ச்சை

தர்பூசணி தொடர்பான சர்ச்சை இன்று பேசுபொருளாகியிருக்கிறது. ஒருபக்கம் உணவுத் துறை அதிகாரிகளின் தகவலால் தர்பூசணி விற்பனை குறைந்ததாக விவசாயிகளும் வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட, ரசாயன தர்பூசணி குறித்து ... மேலும் பார்க்க

பாஜகவின் மோசமான ஆதிக்க அரசியல்: வக்ஃபு விவகாரத்தில் விஜய் கண்டனம்!

ஜனநாயகத்திற்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.வக்ஃபு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தெரிவித்திருப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் பார்க்க

கச்சத்தீவு விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை அர... மேலும் பார்க்க