செய்திகள் :

ரூ.2000 நோட்டுகள் 98.08% திரும்ப பெறப்பட்டது: ரிசர்வ் வங்கி

post image

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்க முடிவு செய்தது. இதனையடுத்து, புழக்கத்தில் உள்ள ரூ.2000 ரூபாய் நோட்டுகளில் 98.08% வங்கி அமைப்புக்கு திரும்பி வந்துவிட்டதாகவும், ரூ.6,839 கோடி மட்டுமே பொதுமக்களிடம் தற்போது இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமானவையாக இருந்தாலும், மே 19, 2023 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்திலிருந்து ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

மே 19, 2023 அன்று வணிக முடிவில் ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்திலிருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, நவம்பர் 29, 2024 அன்று வணிக முடிவில் ரூ.6,839 கோடியாக குறைந்தது. இவ்வாறு, 2023 மே 19 நிலவரப்படி புழக்கத்திலிருந்த ரூ.2,000 நோட்டுகளில் 98.08% திருப்பித் பெறப்பட்டுள்ளன என்று தனது அறிக்கையில் தெரிவித்தது.

இதையும் படிக்க: உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! ஏற்றத்தில் புளூ சிப் நிறுவனப் பங்குகள்!

அக்டோபர் 7, 2023 வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் மற்றும் அல்லது மாற்றுவதற்கான வசதி அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வசதியானது அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாட்டி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுதில்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 19 அலுவலகங்களில் இன்னும் கிடைக்க பெறுகிறது.

பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நாட்டின் எந்த தபால் நிலையத்திலிருந்தும் ரூ .2,000 நோட்டுகளை இந்தியா போஸ்ட் மூலம் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதே வேளையில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! ஏற்றத்தில் புளூ சிப் நிறுவனப் பங்குகள்!

மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இன்று உயர்வுடன் முடிவடைந்தன.மும்பை பங்குச் சந்தையின் குற... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

பங்குச்சந்தை இன்று (டிச. 2) சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் முழுக்க பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் இந்த வாரமும் ஏற்றத்துடனே தொடங்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தன... மேலும் பார்க்க

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 45 சதவிகிதம் அதிகரிப்பு!

புதுதில்லி: இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் 29.79 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது சேவைகள், கணினி, தொலைத்தொடர்பு மற்றும... மேலும் பார்க்க

பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் அமைப்பு கோரிக்கை!

கொல்கத்தா: காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுதல், அன்னிய நேரடி முதலீட்டை மேலும் உயர்த்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக ஆயுள் நிறுவன க... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி நிகர லாபம் 17% உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 17 சதவீத நிகர லாப உயா்வைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

நேற்றைய வீழ்ச்சிக்குப் பிறகு 1% உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகளை வாங்கியதால், பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1 சதவிகிதம் உயர்ந்து முடி... மேலும் பார்க்க