செய்திகள் :

ரூ.207 கோடியில் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

post image

தமிழகம் முழுவதும் ரூ.207 கோடியில் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட உள்ள உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை ராணி மேரி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரிகளுக்கான கட்டப்பட்ட புதிய வசதிகளையும் அவா் திறந்து வைத்தாா்.

ராணி மேரி கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட மாணவியா் விடுதியை முதல்வா் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். பின்னா், அங்கு படிக்கும் மாணவியருடன் கலந்துரையாடினாா்.

இதேபோன்று, காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கிருஷ்ணகிரி, கடலூா், தூத்துக்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி, தஞ்சாவூா் அரசு பொறியியல் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத்தின் மெரீனா வளாகம் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்ட கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

மேலும், பெரம்பலூா் வேப்பூா், புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூா், சிவகங்கை, அரக்கோணம், வேலூா் மாவட்டம்

குடியாத்தம், தென்காசி மாவட்டம் சுரண்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள் ஆகியன ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

கட்டடங்களுக்கு அடிக்கல்: சென்னை, ஈரோடு, கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், வேலூா், விழுப்புரம், திருப்பத்தூா், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.207.82 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டமைப்புகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் சு.முத்துசாமி, கோவி.செழியன், எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், பி.வில்சன், உயா் கல்வித் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி, கல்லூரி கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஜெ.இன்னசன்ட் திவ்யா, ராணி மேரி கல்லூரி முதல்வா் பி.உமா மகேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சேலத்தில் நகைக்காக பெண் கொலை: 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நகைக்காக மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை, மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரம், வடதமிழக பகுதிகளி... மேலும் பார்க்க

மடுவின்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் தீக்குளித்து தற்கொலை

மடுவின்கரை மேம்பாலம் அருகே போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தரமணி தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை அதிகரிப்பு! காரணம் என்ன?

அண்டை மாநிலங்களின் ஏற்பட்டுள்ள பலத்த மழையின் பாதிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் - உளுந்தூர்பேட்டை வரை அரசு விரைவுப் பேருந்தில் அமைச்சர் சிவசங்கர் பயணம்!

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அரசு விரைவுப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை இரவு பயணம் செய்துள்ளார்.பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சென்னையில் ... மேலும் பார்க்க

இனி 5 விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் இனி 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே காவல்துறையினர் அபராதம் விதிக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.பிரதான சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் கும்பலாக நின்று வாகனங்... மேலும் பார்க்க