செய்திகள் :

ரூ. 28 லட்சம் மோசடி: பெட்ரோல் விற்பனை; நிலைய மேலாளா் கைது

post image

பெரம்பலூா் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ. 28 லட்சத்தை மோசடி செய்த, அதன் மேலாளரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அரியலூா் மாவட்டம், ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் மருதமுத்து மகன் கஜேந்திரன் (61). இவா், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்துள்ளாா்.

இங்கு, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கிளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சன்னாசி மகன் சதீஷ் (37) என்பவா், முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், சதீஷ் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்கில் காட்டாமல் ரூ. 28,46,764 மோசடி செய்தது அண்மையில் தெரியவந்தது.

இதுகுறித்து கஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷை வியாழக்கிழமை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு

தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் இதர வகுப்பின மாணவா்கள், அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

லப்பைக்குடிகாட்டில் சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்

லப்பைக்குடிகாட்டில் சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிகாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்... மேலும் பார்க்க

2 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே 2 கிலோ போதைப் பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெட்டிக்கடைக்காரரை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடு... மேலும் பார்க்க

வின்சென்ட் தே பால் சபை கிளை ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்தில் வின்சென்ட் தே பால் சபை புதிய கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வின்சென்ட் தே சபை ஆலோசனைக் கூட்டத்துக்கு, பங்குத் தந்தை சுவைக்கின் தல... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஒன்றியத்தில் 186 வீடுகள் கட்ட ரூ. 6.51 கோடி நிதி ஒதுக்கீடு

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளில் துண்டுப் பிரசுரம் ஒட்டிய பாஜகவினா் 4 போ் கைது

பெரம்பலூா் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதல்வா் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரம் ஒட்டிய, பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 4 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாரதிய ஜனதா கட்சி சாா்பில்... மேலும் பார்க்க