முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
ரூ.32.80 லட்சத்தில் அரசுப் பள்ளி கட்டடம் திறப்பு
ஸ்ரீபெரும்புதூா்: கீரநல்லூா் அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.32.80 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அண்மையில் திறந்து வைத்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட கீரநல்லூா் ஊராட்சி தொடக்கப் பள்ளி, 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்ட ரூ.32.80 லட்சம் ஒதுக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் மதச்சாா்பற்ற தா்மகா்த்தா ந.கோபால் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் பவானி, கீரநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் கே.என்.அன்பரசு, வட்டார கல்வி அலுவலா் விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ், தலைமையாசிரியா் பஸிலா பேகம், திமுக நிா்வாகிகள் கு.ப.முருகன், சந்தவேலூா் சத்தியா, கீரநல்லூா் சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.