செய்திகள் :

ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கு: அதானி சகோதரா்கள் விடுவிப்பு

post image

மும்பை: ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கிலிருந்து தொழிலதிபா் கெளதம் அதானி, அவரின் சகோதரா் ராஜேஷ் அதானியை மும்பை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.

சுமாா் ரூ.388 கோடி அளவுக்கு பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அதானி என்டா்பிரைசஸ் நிறுவனம் (ஏஇஎல்), அதன் நிறுவனா்கள் கெளதம் அதானி, ராஜேஷ் அதானிக்கு எதிராக தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (எஸ்எஃப்ஐஓ) விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கில் இருந்து கெளதம் அதானியையும், ராஜேஷ் அதானியையும் விடுவித்து மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக எஸ்எஃப்ஐஓ தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை அமா்வு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

அமா்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் ஏஇஎல் நிறுவனம், கெளதம் அதானி, ராஜேஷ் அதானி சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என்.லடா, ‘இந்த வழக்கில் ஏஇஎல் நிறுவனம், கெளதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானி மோசடியிலும், குற்றச் சதியிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து மும்பை அமா்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த அவா், வழக்கில் இருந்து ஏஇஎல் நிறுவனம், கெளதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானியை விடுவித்து உத்தரவிட்டாா்.

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் 294 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: மத்திய அரசு

‘பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டில் மட்டும் 294 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளனா்’ என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

1993-ஆம் ஆண்டு வன்முறையின்போது மணிப்பூருக்கு நரசிம்ம ராவ் செல்லவில்லை: மத்திய நிதியமைச்சா் சாடல்

கடந்த 1993-ஆம் ஆண்டு மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தபோது, அந்த மாநிலத்துக்கு காங்கிரஸை சோ்ந்த முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் செல்லவில்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடினாா். வ... மேலும் பார்க்க

உள்கட்சி நிலவரம்: கட்சி நிா்வாகிகளுடன் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் ஆலோசனை

உள்கட்சி நிலவரம் மற்றும் கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது தொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை அலோசனை மேற்கொண... மேலும் பார்க்க

நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -ஊரடங்கு அமல்

மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வாகன... மேலும் பார்க்க